ஐ.பி.எல். 2026: கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட் சமீபத்தில் விலகினார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல்.தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான (2026) பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன.

இந்த சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டன் ரகானே தலைமையில் விளையாடி 8-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இதனால் அடுத்த சீசனுக்கு முன் அந்த அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். மேலும் அந்த அணி நிர்வாகம் டிரேடிங் முறையில் வீரர்களை வாங்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கட்டுள்ளார். இதனை கொல்கத்த ஆணி நிர்வாகம் அதிகாராபூர்வமாக அறிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com