’தோனி அந்த இடத்தில் களமிறங்குவார்’ ...அஸ்வின் சொன்ன விஷயம் - சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

2026 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
’தோனி அந்த இடத்தில் களமிறங்குவார்’ ...அஸ்வின் சொன்ன விஷயம் - சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், 2026 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்காக தோனி ஏற்கனவே தீவிர பயிற்சியைத் தொடங்கிவிட்ட நிலையில், அஸ்வின், சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "தோனி மிகவும் உடற்தகுதியுடன் காணப்படுகிறார். அவர் 9வது இடத்தில் களமிறங்குவார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த முறை 3வது வீரராக களமிறங்குவார் என்று நினைக்கிறேன்." என்றார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

எம்எஸ் தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஒரு பினிஷராகவே அறியப்படுகிறார். ஆனால், 3வது இடத்தில் இதுவரை 8 முறை மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக 2022 இல் 3வது இடத்தில் களமிறங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com