ஐ.பி.எல். 2026: இந்த 5 அணிகளில் 4தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் - அமித் மிஸ்ரா கணிப்பு


ஐ.பி.எல். 2026: இந்த 5 அணிகளில் 4தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் - அமித் மிஸ்ரா கணிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2025 9:28 AM IST (Updated: 23 Dec 2025 10:06 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடந்தது.

இதில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் இருந்த கையிருப்பு தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வீரரை குறி வைத்து பல்வேறு வியூகங்களுடன் வந்திருந்தனர். ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார். 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணிகளை வலுப்படுத்தி விட்டன. இதனால் அடுத்த ஐ.பி.எல். சீசன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகள் குறித்து இந்திய முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது கணிப்பின் படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகளில் இருந்து 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story