

மும்பை,
ஐபிஎல் 2026 சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் மழை போல பொழிந்தாலும், மறுபுறம் கேப்டன்களின் பாக்கெட்டுகள் அபராதத்தால் காலியாகி வருகின்றன.
சமீபத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்த ஸ்லோ ஓவர் ரேட் வலையில் சிக்கியுனார். நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அற்புதமான வெற்றியை டெல்லி அணி கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், ஐபிஎல் நிர்வாகம் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியை அளித்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததற்காக அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் என்பது அணிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அக்சர் படேல் மட்டும் இதில் சிக்கவில்லை. அவருக்கு முன்பே 5 கேப்டன்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் , ஹர்திக் பாண்டியா, அஜிங்க்யா ரஹானே ஆகியோர் ஏற்கனவே இந்த பட்டியலில் உள்ளனர். அக்சர் படேல் இதில் ஆறாவது கேப்டன் ஆவார்.