ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும் பேட் கம்மின்ஸ்

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும் பேட் கம்மின்ஸ்
Published on

ஜெய்ப்பூர்,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த எந்த ஆட்டத்திலும் பேட் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா சென்றார்.

இந்நிலையில், காயம் குணமடைந்ததையடுத்து பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவர் நாளை நடைபெறும் ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க உள்ளார்.

பேட் கம்மின்ஸ் நாளைய ஆட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில் அவர் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பேற்பாரா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com