ஐ.பி.எல்.: 6 போட்டிகளில் 5 தோல்வி.. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா..?


ஐ.பி.எல்.: 6 போட்டிகளில் 5 தோல்வி.. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா..?
x

image courtesy:PTI

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 8 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 5 தோல்விகள் பெற்ற நிலையில் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றை உறுதி செய்ய குறைந்தபட்சம் 8 வெற்றிகள் பெற வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 8 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் குறித்து காணலாம்..!

சென்னை அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 8 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக 6 வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெற்ற நிலையில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஒருவேளை இரண்டிற்கும் மேற்பட்ட தோல்விகளை சந்தித்தால் லீக் சுற்றுடன் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் சென்னை அணிக்கு எதிர்வரும் போட்டிகள் கிட்டத்தட்ட வாழ்வா- சாவா? போன்றதாகும்.

1 More update

Next Story