

மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் காணும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.