ஐபிஎல் 2022: அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன்..?

ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்த உடன், புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இதன்படி புதிதாக வந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாகவும், ரஷிக் கான் ஆகியோரையும் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்பட்டது. இதே போல அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்து ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புதிதாக இணைந்து இருக்கும் ஆமதாபாத் அணியின் கேப்டனாக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அணி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அகமதாபாத் அணி நியமிக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com