ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்
Published on

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 73 இடங்களுக்கான இந்த ஏலத்தில் 332 வீரர்கள் இறுதிபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா) உள்பட 143 வெளிநாட்டு வீரர்களும் இந்த பட்டியலில் அடங்குவார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. போராட்டங்கள் நடந்து வந்தாலும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிடப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com