ஐ.பி.எல்; வீரர்கள் வென்ற விருதுகள் - விவரம்

ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

சென்னை,

17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐ.பி.எல் கோப்பையை கொல்கத்தா அணி வெல்வது இது 3வது முறையாகும்.

இந்நிலையில் ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் அந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஐ.பி.எல் தொடரில் பல்வேறு விருதுகளை வென்ற வீரர்கள் குறித்த விவரங்களை இங்கு காண்போம்.

சாம்பியன் பட்டம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2வது இடம் - சன்ரைசர்ஸ் ஐதராபாத்

தொடர் நாயகன் - சுனில் நரேன் (488 ரன் + 17 விக்கெட்)

ஆரஞ்சு தொப்பி (அதிக ரன் அடித்தவர்) - விராட் கோலி (741 ரன்)

ஊதா தொப்பி (அதிக விக்கெட் எடுத்தவர்) - ஹர்ஷல் படேல் (24 விக்கெட்)

மிகுந்த மதிப்புமிக்க வீரர் - சுனில் நரேன் (488 ரன் + 17 விக்கெட்)

வளர்ந்து வரும் வீரர் - நிதிஷ் குமார் ரெட்டி

போட்டியை அறத்துடன் விளையாடிய அணி - சன்ரைசர்ஸ் ஐதராபாத்

பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருது - ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com