ஐபிஎல் - 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா?... ஐதராபாத்துடன் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கொல்கத்தாவின் 'பிளே-ஆப்' வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும்.
ஐபிஎல் - 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா?... ஐதராபாத்துடன் இன்று மோதல்
Published on

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் 45-வது லீக் ஆட்டத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில், முன்னாள் சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்புத் தொடரில் ஆடிய 9 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ள ஐதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் 3 முறை சாம்பியனான கொல்கத்தா அணிக்கு இந்த சீசன் சற்று ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கொல்கத்தாவின் 'பிளே-ஆப்' வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும். எனவே, இன்றைய போட்டி அவர்களுக்கு 'வாழ்வா-சாவா' போராட்டமாகும்.

Also Read
சிஎஸ்கே முன்னாள் வீரருடன் காதல்? - எல்லை மீறிய சர்ச்சை... கொதித்தெழுந்த ஏஷா சாகர்
ஐபிஎல் - 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா?... ஐதராபாத்துடன் இன்று மோதல்

இதுவரை இவ்விரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 20 முறையும், ஐதராபாத் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிவிவரத்தில் கொல்கத்தா முன்னிலையில் இருந்தாலும், நடப்புத் தொடரின் பார்ம் அடிப்படையில் ஐதராபாத் அணி மிகவும் வலுவாகக் காணப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றுள்ள ஹைதராபாத் அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர முனைப்பு காட்டும். அதேவேளையில், கொல்கத்தா அணி தனது பிளே-ஆப் கனவைத் தக்கவைக்க கடுமையாக போராடும். எனவே இந்த மதிய நேர ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com