ஐபிஎல்: 2016-ல் சஹால்... 2026-ல் ரஷீத் கான்... 10 வருடங்களுக்குப் பின் திரும்பிய வரலாறு

இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல்:  2016-ல் சஹால்... 2026-ல் ரஷீத் கான்... 10 வருடங்களுக்குப் பின் திரும்பிய  வரலாறு
Published on

மும்பை,

ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். ரன்கள் மழை பெய்த இந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

டாப்-10 பட்டியலில் ரஷீத் கான் மட்டும்

இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலில், ரஷீத் கான் மட்டுமே ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இடம்பிடித்துள்ளார். 21 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், அதிக விக்கெட் வேட்டையாடிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற அனைத்து இடங்களையும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

பேட்ஸ்மேன்களின் அதிரடி தாக்கம்

ஐபிஎல் 2026-ல் அதிகளவில் 200+ ஸ்கோர்கள் பதிவானதுடன், பேட்டர்கள் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை கையாண்டனர். குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கும் பொறுப்பு கொண்ட ஸ்பின்னர்கள், பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் அதிக ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே நிலை

இதற்கு முன்பு 2016 ஐபிஎல் சீசனில் சஹால் மட்டுமே அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அதன்பிறகு முதல் முறையாக, மீண்டும் ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டுமே டாப்-10 பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

மாறி வரும் டி20 கிரிக்கெட்

பவர் ஹிட்டிங், சிறிய மைதானங்கள், அதிரடி பேட்டிங் அணுகுமுறை போன்ற காரணங்களால் டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு மேலும் சவாலானதாக மாறி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com