ஐபிஎல்: சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சென்னை அணி ஓவரை வீசி முடிக்கவில்லை.
ஐபிஎல்: சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
Published on

சென்னை,

சென்னையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்சனின் சதம், சிறந்த பீல்டிங், ஓவர்டனின் சிறப்பான பந்துவீச்சு என நேற்றைய போட்டி சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அணியினர் தங்களது 20 ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சென்னை அணி ஓவரை வீசி முடிக்கவில்லை. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு போட்டி கட்டணத்தில் ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com