

கவுகாத்தி,
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், கெய்க்வாட் இருவரும் தலா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆயுஷ் மாத்ரே (0), ஷார்ட் (2), சர்ப்ராஸ் கான் (17), சிவம் துபே (6) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி 9 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.