ஐபிஎல்: சென்னை அபார பந்துவீச்சு... மும்பை 159 ரன்கள் சேர்ப்பு

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்: சென்னை அபார பந்துவீச்சு... மும்பை 159 ரன்கள் சேர்ப்பு
Published on

சென்னை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 44வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரரான வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ரிக்கல்டன் - நமன் திர் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிக்கல்டன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நமன் திர் அபாரமாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. திலக் வர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை தரப்பில் கம்போஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com