

சார்ஜா,
13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் விளையாடின.
இதில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் வெற்றி கணக்குடன் தனது போட்டியை தொடங்கியுள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் தனது வெற்றியை தொடரும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய இருக்கிறது.