

சென்னை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, பனிப்பொழிவை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.