

மும்பை
ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது.
அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களின் ஏலத்தில் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொண்டால், அவர்களின் 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்கள் என்றால் ரூ. 33 கோடி, 2 வீரர்கள் என்றால் ரூ.24 கோடி அல்லது ஒரு வீரர் மற்றும் தக்க வைத்து கொண்டது என்றால் ரூ.14 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.
இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி (ரூ .12கோடி), ஜடேஜா( ரூ .16 கோடி) , மொயீன் அலி (ரூ .8 கோடி) ருதுராஜ்(ரூ .6 கோடி), ஆகியோரைத் தக்கவைத்துள்ளது.
சிஎஸ்கே அணி கேப்டன் டோனியை தக்கவைத்துள்ளதால் வருகிற ஐபிஎல் போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகியுள்ள்ளது,இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.