

அபுதாபி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது. இதில் பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டது.
அதே சமயம் ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 10 தோல்வி என்று 4 புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஐதராபாத் அணி, ஆறுதல் வெற்றிக்காக முடிந்தவரை போராடும். பலம் வாய்ந்த பெங்களூரு அணியின் டாப்-2 ஆசையை ஐதராபாத் சிதைக்குமா என்பதே இன்றைய ஆட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.