ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத்

ஐதராபாத் அணியுடனான இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத்
Published on

டெல்லி,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 28-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com