ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டம் மழையால் பாதிப்பு

கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது.
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டம் மழையால் பாதிப்பு
Published on

கொல்கத்தா,

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் பின் ஆலன் களமிறங்கினர். 2-வது ஓவரில் பின் ஆலன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேமரூன் கிரீனும் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில் 3.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதிக்கப்பட்டது. ரஹானே 8 ரன்களுடனும், ரகுவன்ஷி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com