ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்

லக்னோ, கொல்கத்தா அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியதில் 5-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது. லக்னோ அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி (டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம்) கண்டு 9-வது இடத் தில் இருக்கிறது. அந்த அணி கடைசி 4 ஆட் டங்களில் வரிசையாக தோற்று தத்தளிக்கிறது. இதுவரை 18 வீரர்களை பயன்படுத்தியும் சரி யான ஆடும் லெவன் அணியை அடையாளம் காண முடியாமல் தடுமாறி வருகிறது.

லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பண்ட், முகுல் சவுத்ரி, மார்க்ரம், ஆயுஷ் பதோனி, பிரின்ஸ் யாதவ், முகமது ஷமி உள் ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் ஒரு வெற்றி (ராஜஸ்தானுக்கு எதிராக), 5 தோல்வி (மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, குஜராத் அணிகளிடம்), ஒரு முடிவில்லையுடன் (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியில் அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா உள்ளிட்ட தரமான வீரர்கள் அங்கம் வகித்தாலும் ஒரு அணியாக சிறப்பான ஆட் டத்தை வெளிக்காட்ட முடியாமல் திணறுகிறது. 6 ஆட்டத்துக்கு பிறகு வெற்றிக் கணக்கை தொடங்கிய அந்த அணி 6 நாள் இடைவெளிக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் இறங்குகிறது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்த ஆட்டம் முக்கியமானதாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியதில் 5-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின் றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com