ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோவுக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோவுக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
Published on

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும், சூர்யவன்ஷி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய துருவ் ஜூரெல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரியான் பராக் 20 ரன்களும், ஹெட்மயர் 22 ரன்களும், டோனவன் பெரேரா 20 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 43 ரன்களுடனும், ஷிவம் துபே 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com