ஐ.பி.எல்.:சாதனை பட்டியலில் வாட்சன், காலிஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த ரசல்

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசல் 7 சிக்சர்கள் உட்பட 64 ரன்கள் குவித்து அசத்தினார்.
image courtesy: twitter/@IPL
image courtesy: twitter/@IPL
Published on

கொல்கத்தா,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா ரசல்லின் அதிரடியான பேட்டிங்கால் 208 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் 204 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 7 சிக்சர் உட்பட 64 ரன்கள் குவித்த ரசல், பவுலிங்கிலும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் குறைந்த பட்சம் 1 விக்கெட் வீழ்த்திய வீரர்களின் சாதனை பட்டியலில் ஜாம்பவான்கள் வாட்சன் மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ரசல் - 9 முறை

2. ஜாக் காலிஸ்/வாட்சன் - 8 முறை

3.ரெய்னா/பொல்லார்டு - 6 முறை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com