ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு பதில் உம்ரன் மாலிக் சேர்ப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு பதில் உம்ரன் மாலிக் சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு பதில் உம்ரன் மாலிக் சேர்ப்பு
Published on

அபுதாபி,

கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக ஐதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரும், அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி அன்றைய தினம் ஆட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியான நடராஜனுக்கு பதிலாக உம்ரன் மாலிக் ஐதராபாத் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏ பிரிவு மற்றும் இருபது ஓவர் போட்டி ஒன்றில் விளையாடி உள்ளார். உம்ரன் மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். இதுதவிர, ஐதராபாத் அணியின் ஒரு பகுதியாக அவர் வலை பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். எனினும், நடராஜன் குணமடைந்து திரும்பும் வரையே உம்ரன் அணியில் விளையாட அனுமதிக்கப்படுவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com