ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சி.எஸ்.கே

Image Courtesy: @ChennaiIPL
சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார்.
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து சென்னையின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் கான்வே 10 ரன்னிலும் அடுத்து வந்த அஸ்வின் 13 ரன்னிலும், ஜடேஜா 1 ரன்னிலும், உர்வில் படேல் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 20 பந்தில் 43 ரன் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து பிரெவிஸ் மற்றும் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இதில் பிரெவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக ஆடிய பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து தோனி களம் புகுந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆட உள்ளது.






