ஐ.பி.எல்.: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு


தினத்தந்தி 24 March 2025 7:04 PM IST (Updated: 24 March 2025 7:07 PM IST)
t-max-icont-min-icon

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

விசாகப்பட்டினம்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

கடந்த சீசனில் 6-வது இடம் பெற்ற டெல்லி அணி புதிய கேப்டன் அக்சர் பட்டேல் தலைமையில் களம் இறங்குகிறது. அதேபோல் லக்னோ அணியால் அதிகபட்ச தொகையாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியை வழிநடத்துகிறார்.

புதிய கேப்டன்களுடன் களம் காணும் இரு அணிகளும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story