ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம்; ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்த உர்வில் பட்டேல்

சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம்; ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்த உர்வில் பட்டேல்
Published on

சென்னை,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 14 பந்தில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த உர்வில் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 13 பந்துகளில் 50 ரன்கள் (அரை சதம்) விளாசினார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான பந்துகளில் (13 பந்துகள்) 50 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலில் உர்வில் பட்டேல் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக குறைவான பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் பட்டியலில் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் (13 பந்துகளில் அரைசதம்) முதல் இடத்தில் உள்ளார். தற்போது ஜெய்ஸ்வாலின் சாதனையை உர்வில் பட்டேல் சமன் செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com