ஐ.பி.எல்.இறுதிப்போட்டி: வித்தியாசமான கெட்டப்பில் வந்த கிறிஸ் கெயில்.. புகைப்படங்கள் வைரல்

18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூரு அணி இதுவரை 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை 80 இழந்து ரன்கள் அடித்துள்ளது. இந்த போட்டியை காண பல முன்னாள் வீரர்களும், பல்வேறு பிரபலங்களும் அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அதில் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரரான கிறிஸ் கெயில் வித்தியாசமான கெட்டப்பில் வந்துள்ளார்.

அதாவது இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக பெங்களூரு அணியின் ஜெர்சியையும், தலையில் தலைப்பாகையும் அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com