ஐ.பி.எல்.: சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?

ஐ.பி.எல் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடந்தது.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) உள்நாட்டு வீரர்களுக்கு குறிவைத்தது. அந்த வகையில் சர்வதேச அனுபவம் இல்லாத உள்நாட்டு வீரர்களான இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீர், சிக்சர் அடிப்பதில் வல்லவரான கார்த்திக் சர்மா ஆகியோரை பெரிய தொகைக்கு வாங்கியது. மொத்தத்தில் சென்னை அணி 9 வீரர்களை எடுத்தது.

முன்னதாக சென்னை அணி 15 வீரர்களை தக்க வைத்திருந்தது. அதுபோக சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியது. தற்போது ஏலத்தில் 9 வீரர்களை வாங்கியுள்ளது. இதனையும் சேர்த்து சென்னை அணியில் மொத்தம் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரெவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், எம்எஸ் தோனி, நூர் அகமது, ராகுல் சாஹர், கலீல் அகமது.

இம்பேக்ட் வீரர்: அன்ஷுல் கம்போஜ். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com