ஐ.பி.எல். பணிகளை பார்வையிட கங்குலி துபாய் சென்றார்

ஐ.பி.எல். பணிகளை பார்வையிட கங்குலி துபாய் சென்றார்.
ஐ.பி.எல். பணிகளை பார்வையிட கங்குலி துபாய் சென்றார்
Published on

துபாய்,

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி அரங்கேற இருக்கும் இந்த போட்டிக்கான பணிகளை பார்வையிட இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று விமானம் மூலம் துபாய் சென்றார். விமான பயணத்துக்காக முகக்கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செல்லும் புகைப்படத்தை கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஐ.பி.எல். போட்டிக்காக துபாய் செல்வது 6 மாதங்களில் என்னுடைய முதல் விமான பயணம். விசித்திரமான வாழ்க்கை மாற்றங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு கங்குலி 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 3 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதன் பிறகே ஐ.பி.எல். பணிகளை கவனிப்பார். வருகிற 23-ந்தேதி வரை அமீரகத்தில் தங்கியிருக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com