ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
Published on

சண்டிகார்,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. சண்டிகார் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சனும், கில்லும் களமிறங்கினர். சாய் சுதர்சன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லருடன் கில் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் குஜராத் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

கில் 39 ரன்களும், பட்லர் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ் தன் பங்குக்கு 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் வைஷாக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது. கடைசி ஓவரில் மட்டும் அர்ஷ்தீப் சிங் 4 வைடுகள் மற்றும் ஒரு நோ பால் உட்பட மொத்தம் 11 பந்துகள் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com