ஐபிஎல்: ஹர்ஷித் ராணா விளையாட மாட்டார்: கொல்கத்தா பயிற்சியாளர் உறுதி

ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஐபிஎல்: ஹர்ஷித் ராணா விளையாட மாட்டார்: கொல்கத்தா பயிற்சியாளர் உறுதி
Published on

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, உலகக் கோப்பை கிரிக்கெட் போட் டிக்கு முன்பாக நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது வலது கால்முட்டியில் காயமடைந்து தசை நார் கிழிந்தது. உடனடியாக ஆபரேஷன் செய் யப்பட்டு, காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை தொடங்கி இருக்கிறார். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இந்த நிலையில் அவர் 19-வது ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாவும், அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நேற்று தெரிவித்தார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப் படுவார் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com