ஐபிஎல் போட்டிகள் வணிகமாக மாறிவிட்டது: ஐதராபாத் பயிற்சியாளர் ஆதங்கம்

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற் றது.
ஐபிஎல் போட்டிகள் வணிகமாக  மாறிவிட்டது: ஐதராபாத் பயிற்சியாளர் ஆதங்கம்
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ரையான் ரிக்கெல்டனின் சதத் தோடு (10 பவுண்டரி, 8 சிக்சருடன் 123 ரன்) மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 244 ரன் இலக்கை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற் றது. டிராவிஸ் ஹெட் (76 ரன்), ஹென்ரிச் கிளாசென் (65 ரன்) அரைசதம் அடித்தனர்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்படுவதும், அந்த ரன்களை சேஸ் செய்து அணிகள் வெற்றி பெறுவதும் சுலபமாக மாறி விட்டது. பேட்டிங்கிற்கு சாதகமாகி பிட்ச் தயார் செய்வதால் தான் இது போல நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஐதராபாத் அணி சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் முரளிதரன் கூறியதாவது,

பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் உள்ள மைதானங்களில் போட்டி நடந்தால் ரசிகர்களுக்கு சலிப்பாக இருக்கும். அவர்கள் அதிகமாக பவுண்டரி சிக்ஸர்களை பார்க்கவே விரும்புகிறார்கள். அதனால் தான் போட்டிகளும் அதிக ரன்கள் வரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் வளர்ச்சியை விட, ரசிகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்காகவும், பெரிய வணிகமாகவும் மாறிவிட்டது. இங்கு விளம்பரதாரர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆர்வத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com