ஐ.பி.எல் : ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
Image Courtesy : IPL
Image Courtesy : IPL
Published on

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .அதாவது ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com