ஐ.பி.எல்; பஞ்சாபை சாம்பியனாக்கினால் இந்த பொறுப்பு ஸ்ரேயாஸ் அய்யருக்குத்தான் - ராபின் உத்தப்பா

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர் படைத்துள்ளார்.
image courtesy: twitter/@PunjabKingsIPL
image courtesy: twitter/@PunjabKingsIPL
Published on

ஜெட்டா,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்தன.

ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யருக்கு எதிர்பார்த்ததைப் போலவே ஏலத்தில் கடும் கிராக்கி காணப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர் படைத்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

அதில் ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை சாம்பியனாகிய பிறகு இந்த ஆண்டு சாம்பியன் இல்லாத அணிக்கு கேப்டனாக போகிறார் என சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஸ்ரேயாஸ் அய்யர் சாம்பியன்ஷிப் வென்ற அணியில் இருந்து எந்த ஒரு சாம்பியன் பட்டத்தையும் வெல்லாத பஞ்சாப் அணிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு நல்ல சவாலாக இருக்கும். ஒருவேளை பஞ்சாப் அணி இவரது தலைமையில் பட்டம் வென்றால் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பார் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com