ஐபிஎல்: தொடக்க விழா நடைபெறாது என தகவல்

தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்: தொடக்க விழா நடைபெறாது என தகவல்
Published on

பெங்களூரு ,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 28-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடக்க போட்டிக்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் 2026-ன் பிரம்மாண்ட தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஆர்பிசி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com