ஐபிஎல்: தொடக்க வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்: தொடக்க வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல்
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2025 சீசனில் ராகுல் பெரும்பாலும் 4-வது வரிசையில் விளையாடினார். ஆனால், அணியின் மற்ற தொடக்க வீரர்கள் சரியாக ஆடாத காரணத்தால், இந்த முறை அவரை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்க டெல்லி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2025 சீசனில் ராகுல் டெல்லி அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 539 ரன்கள் குவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com