ஐபிஎல்: கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டம் மழையால் ரத்து

கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது
ஐபிஎல்: கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டம் மழையால் ரத்து
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா,பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யா 69 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணி ஒரு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது . இதனால் ஆட்டம் பாதிக்கப்ட்டது.

மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com