ஐபிஎல் - கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியதில் 5-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் - கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு
Published on

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்சை சந்திக்கிறது.

லக்னோ அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி (டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம்) கண்டு 9-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் ஒரு வெற்றி (ராஜஸ்தானுக்கு எதிராக), 5 தோல்வி (மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, குஜராத் அணிகளிடம்), ஒரு முடிவில்லையுடன் (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) கடைசி இடத்தில் உள்ளது.

Also Read
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி - ரசிகர்களுக்கு அனுமதி
ஐபிஎல் - கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியதில் 5-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com