

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஐதாராபாத் உள்லிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
சீசனில் முதல் ஆட்டம் பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து உள்ள நிலையில், பெங்களூரில் நடைபெறும் போட்டிகளை காண ஏதுவாக ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் யு.டி.காதர் துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரிடம் கேட்டுக் கொண்டார்.
அதையேற்றுக் கொண்ட டி.கே.சிவக்குமார், நிச்சயம் இது குறித்து கிரிக்கெட் சங்க தலைவருடன் பேசுவதாக உறுதி அளித்தார். முன்னதாக டிக்கெட் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கர்நாடக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று சபாநாயகர் அரசை வலியுறுத்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி விளையாடும் லீக் போட்டிகளில் 5 ஆட்டங்கள் மட்டுமே பெங்களூருவில் நடைபெறுகிறது