

அபுதாபி,
ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது.
இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், சென்னை அணியில், பிராவோவுக்கு பதிலாக சாம் கர்ரன் சேர்க்கப்பட்டு உள்ளார்.