

லக்னோ
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் லக்னோ அணி உள்ளது. போட்டியின் 3-வது ஓவரில் முகமது ஷமி 141 கி.மீ. வேகத்தில் பந்து வீசியபோது, ஜெய்ஸ்வால் அதனை அடிக்க முற்பட்டார். ஆனால், விக்கெட் கீப்பர் பண்ட்டின் கைகளுக்கு பந்து சென்றது. அவர் துள்ளி குதித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து, ஜெய்ஸ்வாலை வெளியேற்றினார்.
பண்ட் கேட்ச் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ஷமி அடுத்து பந்து வீசியபோது, உடனடியாக செயல்பட்ட பண்ட் அதனை பிடித்து, மற்றொரு பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல்லையும் வெளியேற்றினார். ஷமி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், பவர்பிளேவில் 32/2 என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறியது.