

அடிலெய்டு,
உலக கிரிக்கெட்டில் ஒரு முக்கிய நிகழ்வாக, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற அடிலெய்டு ஓவல் மைதானத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் சில போட்டிகளை நடத்துவதற்கான ஒரு திட்டத்தை அடிலெய்டு ஓவல் தலைவர் ஜேமி பிரிக்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் வில் ரெய்னர் ஆகியோர் முன்வைத்துள்ளனர்.
இது சமீபத்தில் பல முக்கிய பங்குதாரர்களுடன் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த உரையாடல் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
உலகின் பணக்கார பிரான்சைஸ் லீக் என மதிப்பிடப்படும் ஐபிஎல் போட்டியை, ஆஸ்திரேலியாவில் சுற்றுலாவிற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கணிசமான இந்தியர்கள் இருப்பதால், ஒரு ஐபிஎல் போட்டியின் டிக்கெட்டுகள் நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து, அடிலெய்டு நகரத்திற்கு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
பிசிசிஐ இந்த முடிவுக்கு என்ன சொல்லப் போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.