ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் தொடங்கியது.
Published on

ஜெட்டா,

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26 கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.

இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் தொடங்கியது. இதில் முதல் வீரராக ரோவ்மன் பவலை கொல்கத்தா அணி ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

உள்ளூர் வீரரான அன்ஷுல் கம்போஜை ஏலத்தில் எடுக்க சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் சென்னை அணி ரூ. 3.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது.

ஸ்டீவ் சுமித், அல்சாரி ஜோசப், சிக்கந்தர் ராசா, பதும் நிசாங்கா, பிரண்டன் கிங், கஸ் அட்கின்சன், கைல் மேயர்ஸ், சர்பராஸ் கான், நவ்தீப் சைனி, ஜேசன் பெர்ஹண்ட்ராப், மேத்யூ ஷார்ட்,  போன்ற முன்னணி வீரர்களை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஓவர்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com