ஐ.பி.எல்.: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த எம்.எஸ்.தோனி

Image Courtesy: @IPL / @ChennaiIPL
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை அணியினர், பெங்களூருவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் சென்னை விக்கெட் கீப்பர் தோனி 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் சுரேஷ் ரெய்னாவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
அதாவது, ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக அதிக ரன் அடித்தவர் என்ற சுரேஷ் ரெய்னாவின் (4687 ரன், 171 இன்னின்ஸ்) சாதனையை எம்.எஸ்.தோனி (4699 ரன், 204 இன்னிங்ஸ்) முறியடித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல்:
எம்.எஸ்.தோனி - 4699 ரன் (204 இன்னிங்ஸ்)
சுரேஷ் ரெய்னா - 4687 ரன் (171 இன்னிங்ஸ்)
பாப் டு பிளெஸ்சிஸ் - 2721 ரன் (86 இன்னிங்ஸ்)
ருதுராஜ் கெய்க்வாட் - 2433 ரன் (67 இன்னிங்ஸ்)
ரவீந்திர ஜடேஜா - 1939 ரன் (127 இன்னிங்ஸ்)






