ஐபிஎல்: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை, லக்னோ அணிகள்

எஞ்சிய போட்டிகளில் இரு அணிகளும் வென்றாலும் அவைகளால் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய முடியாது.
ஐபிஎல்: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை, லக்னோ அணிகள்
Published on

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.

ஆனால் பிளே ஆப் வாய்ப்பை 2 அணிகள் இழந்துள்ளன. அவை மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆகும். மும்பை மற்றும் லக்னோ அணிகள் தலா 11 ஆட்டங்களில் விளையாடி தலா 3 வெற்றியுடன் தலா 6 புள்ளிகளை பெற்றுள்ளன.

இரு அணிகளுக்கும் இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. 3 போட்டிகளையும் இரு அணிகளும் வென்றாலும், அவைகளால் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய முடியாது. லக்னோ அணியும், 5 முறை சாம்பியனான மும்பை அணியும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையாமல் போனதால் இரு அணி ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com