

சென்னை,
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் ஆன ஐபிஎல் தனது 19வது சீசனை தொடங்கத் தயாராக உள்ளது. இந்த மாபெரும் தொடர் வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பல வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து தனித்துவமான இடத்தை பெற்றுள்ளனர்.
இதில், ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் விருதுதான் “ஆரஞ்சு தொப்பி”. பல முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்த விருதை வென்றிருக்கின்றனர். விராட் கோலி, கிறிஸ் கெயில், வில்லியம்சன் உள்ளிட்ட பலர் இதை வாங்கி இருந்தாலும், அதிக முறை இந்த விருதை வென்றவர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.
“ஆரஞ்சு தொப்பி” - சீசன் வாரியாக வென்றவர்கள்:-
2008: ஷான் மார்ஷ் - 616 ரன்கள்
2009: மேத்யூ ஹெய்டன் - 572 ரன்கள்
2010: சச்சின் - 618 ரன்கள்
2011 மற்றும் 2012: கிறிஸ் கெயில் - 608 மற்றும் 733 ரன்கள்
2013: மைக்கேல் ஹஸ்ஸி - 733 ரன்கள்
2014: ராபின் உத்தப்பா - 660 ரன்கள்
2015: டேவிட் வார்னர் - 562 ரன்கள்
2016: விராட் கோலி - 973 ரன்கள்
2017: டேவிட் வார்னர் - 641 ரன்கள்
2018: வில்லியம்சன் - 735 ரன்கள்
2019: டேவிட் வார்னர் - 692 ரன்கள்
2020- கே.எல்.ராகுல் - 670 ரன்கள்
2021- ருதுராஜ் கெய்க்வாட் - 635 ரன்கள்
2022- பட்லர் - 863 ரன்கள்
2023- சுப்மன் கில் - 890 ரன்கள்
2024- விராட் கோலி - 741 ரன்கள்
2025- சாய் சுதர்சன் - 759ரன்கள்