ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்: மூன்றே இடங்கள்... மோதிக்கொள்ளும் 7 அணிகள்

இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது ஆர்சிபி.
ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்: மூன்றே இடங்கள்... மோதிக்கொள்ளும் 7 அணிகள்
Published on

சென்னை,

ஐபிஎல் 2026 டி20 தொடரின் லீக் சுற்றுகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அந்த 4 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பும், அணிகளுக்கு இடையேயான மோதலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. ஆர்சிபி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் பலமாக அமர்ந்துள்ளது.

அதே வேளையில், இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 5 மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் அதிகாரபூர்வமாக பிளே ஆப் ரேஸிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளன.

Also Read
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 232 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்: மூன்றே இடங்கள்... மோதிக்கொள்ளும் 7 அணிகள்

ஆர்சிபி மட்டுமே தகுதி பெற்றுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றின் மீதமுள்ள 3 இடங்களைப்பிடிக்க இன்னும் 7 அணிகளுக்கு இடையே மிகக்கடுமையான போட்டி நிலவுகிறது.

குஜராத் டைட்டன்ஸ்: 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாசலில் காத்திருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: 14 புள்ளிகளுடன் வலுவான ரன் ரேட்டுடன் அடுத்தபடியாக உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்: 13 புள்ளிகளுடன் பிளே ஆப் ரேஸில் நீடிக்கிறது.

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் : தலா 12 புள்ளிகளுடன் 'டூ ஆர் டை' சூழ்நிலையில் மல்லுக்கட்டி வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் : முறையே 11 மற்றும் 10 புள்ளிகளுடன், தங்களின் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து பிளே ஆப்-க்குள் நுழைய கணக்கு போட்டு வருகின்றன.

லீக் சுற்றின் கடைசி சில போட்டிகள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியின் முடிவும், ரன் ரேட் மாற்றங்களும் எந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com