ஐ.பி.எல்.: முதல் பந்திலேயே சிக்ஸ்..4-வது வீரராக வரலாறு படைத்த பிரியன்ஷ் ஆர்யா


ஐ.பி.எல்.: முதல் பந்திலேயே சிக்ஸ்..4-வது வீரராக வரலாறு படைத்த பிரியன்ஷ் ஆர்யா
x

சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பிரியன்ஷ் ஆர்யா இந்த சாதனையை படைத்துள்ளார்.

முல்லான்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெற்று வரும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர்.

இந்த ஆட்டத்தின் முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இதில் ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொண்ட பிரியன்ஷ் ஆர்யா அதனை சிக்சருக்கு பறக்கவிட்டார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தின் முதல் பந்தில் சிக்சர் அடித்த 4-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

ar

1. நமன் ஓஜா - 2009-ம்ஆண்டு

2. விராட் கோலி - 2019-ம் ஆண்டு

3.பில் சால்ட் - 2024-ம் ஆண்டு

4. பிரியன்ஷ் ஆர்யா - 2025-ம் ஆண்டு

தற்போது அவரை பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் அடித்துள்ளது. பிரியன்ஷ் ஆர்யா 57 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

1 More update

Next Story